கல்லூரி கீதம்
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வாழ்கவே
ஆதி அந்தம் இல்லாத ஆண்டவர் தெய்வம்
அன்னையும் பிதாவும் எங்கள் முன்னெறி தெய்வம்
எண்னோடு எழுத்ததனை ஈபவர் தெய்வம் இனி
என்றுமவரையே பணிந்து இனிது வாழுவோம்
(வாழ்க)
நல்ல உள்ளம் வளர்ப்போம் உடல் உறுதி வளர்ப்போம்
கலை கல்வி வளர்ப்போம் தூய செல்வம் வளர்ப்போம்
நல்லவரை நாடி தினம் நல்வழி நிற்போம் எங்கள்
நாட்டினிற்கே சேவை செய்து நாமும் வாழுவோம்
(வாழ்க)
முத்தமிழும் கற்று மேலை வித்தையும் கற்போம் உயர்
சத்தியமும் ஐக்கியமும் வாழ்விலமைப்போம்
வித்தை தரும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில்
உத்தமராம் ஆசிரியர் தமைப் பணிவோம்.
(வாழ்க)










